Tuesday, March 3, 2009

அய்யா நீ அழுத கண்ணீர்

20

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

அய்யா(ஆத்தா)நீ அழுத கண்ணீர்
ஆறாகப்பெருகி
ஆனைகுளித்தேறி
குளமாகத்தேங்கி
குதிரை குளித்தேறி
வாய்க்காலாய் ஓடி
வழிப்போக்கர் வாய் கழுவி
இஞ்சிக்கு பாஞ்சு
எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்கு பாஞ்சு
மருதானி வேரோடி
தாழைக்கு பாய்கையிலே
தளும்பியதாம் கண்ணீரும்!
வாழைக்கு பாய்கையிலேயே
வத்தியதாம் கண்ணீரும்!

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

2 comments:

sury siva said...

கவி நயா அவர்களின் வலைப்பதிவு வழியாக திரு கோபி நாத் அவர்கள் சொல்லியபடி
இங்கு வந்தேன். தாலாட்டு பாடல்களுக்காகவே ஒரு வலைப்பதிவு என்றார்கள்.

மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் பாடும் தாலாட்டு பாட்டு எங்கள் திருச்சி
மாவட்டம் லால்குடி கிராமங்களில் பரவலாகப் பாடப்படுவது. ஆறிரண்டும் காவேரி,
அதன் நடுவே சீரங்கம் எனும் துவங்கும் பாடல் அது.

நிற்க. முதியவனான நான் தமிழ் வலைப்பதிவுகளில் பதியப்படும் பல பாடல்களுக்கு
எனக்குத் தெரிந்தவரை பாரம்பரிய கர்னாடக மற்றும் கிராமிய மெட்டில் இசை அமைத்து
எனது பதிவிலும் யூ ட்யூபிலும் போடுகிறேன். ( வணிக நோக்கம் எதுவும் இல்லை )இது எனது பொழுது போக்கு. உங்கள் அனுமதியை எதிர்பார்த்து உங்களது பாடலை
யூ ட்யூபிலும் எனது பதிவிலும் இடுகிறேன்.

உங்கள் ஆராரோ பாடல் கிராமிய மெட்டில் ( எனது அம்மா பாடிய மெட்டில். அதாவது 1950 ல் ) முதலிலும், பிறகு, கர்னாடக சங்கீத ராகமான ய்துகுல காம்போதியிலும் எனது பதிவான ஸீப்ராஸ்பார்க் ப்ளாக்ஸ்பாட் காம் இல் பார்க்கலாம்.

சுப்பு தாத்தா.
http://ceebrospark.blogspot.com

மீனாமுத்து said...

உங்களின் பின்னூட்டம் கண்டு ஸீப்ராஸ் பார்க் வந்தேன்! பாடல் கேட்டு மிக மகிழ்ச்சி!மிகவும் நன்றி.

தங்களின் ப்ளாக் பார்த்து அசந்துவிட்டேன்! எத்தனை முயற்சி!

பாராட்ட வார்த்தைகள் இல்லை!
தொடரட்டும் தங்களின் தொண்டு.