Thursday, September 9, 2010

காடு வெட்டி நாடாக்கி...

38

ராராரோ ராராரோ
ராரி ரேரோ ராராரோ

காடு வெட்டி நாடாக்கி
கழனியெல்லாம் கதிராக்கி

நாடுபெற்று வருவார்கள்
ராசாவோ உங்களய்யா

வெற்றி பெற்று வருவார்கள்
வீமரரோ உங்களய்யா

செம்பொன் வெட்டி தூண் நிறுத்தி
சீனி கொண்டு கால் நாட்டி

கம்ப மகள் சேனையர்க்கு- என் அய்யா நீ
கைக்குதவ வந்தவனோ

கொம்பனையா வாசலுக்கு என் அய்யா நீ
கொண்டுவிக்க வந்தவனோ

கண்ணான கண்ணே
கண்மணியே கண்ணுறங்கு

ராரா ரோ! ராரி ரரோ!
ராரி ரரோ! ராரா ரோ!

7 comments:

தக்குடு said...
This comment has been removed by the author.
Ramanathan said...

கணவரின் உழைப்பைப்பற்றியும் மகன் உழைக்கப்போவதைப்பற்றியும் கூறும் எளிமையான வரிக்ள்.
Ramanathan
summavinmama-rama.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு... வாழ்த்துகள்....

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தாலாட்டு ! நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

மீனாமுத்து said...

தாலாட்டு என்ற இந்த தளத்தைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய கவிநயாவிற்கும்,அதுகுறித்து இங்கு அறியதந்த தங்களுக்கும் மிகுந்த நன்றி தனபாலன்!