Monday, July 12, 2010

தேனோ திரவியமோ...

34.

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

தேனோ திரவியமோ
தெவிட்டாத தெள்ளமுதோ

கட்டிக்கரும்போ
கற்கண்டோ சக்கரையோ

மாசி வடுவோ
வைகாசி மாம்பழமோ

கோடைப்பலாச்சுளையோ
குலை சேர்ந்த மாங்கனியோ

கொஞ்ச வந்த ரஞ்சிதமோ
குறையில்லா சித்திரமோ

சங்கரா உன் காவல்
சங்கடங்கள் நேராமல்

சாத்தையா உன் காவல்
காத்திடுவாய் எங்கள் குலம்

வேலவா உன் காவல்
வேறு வினை வாராமல்

சொக்கையா உன் காவல்
சொப்பனங்கள் தட்டாமல்

கருப்பையா உன் காவல்
கண்ணேறு வாராமல்

கண்ணேறு வாராமல்
கற்பூரம் சுத்திடுங்கள்

வெண்ணீறு இட்டிடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி சுத்த

சுண்ணாம்பும் மஞ்சளுமாய் திட்டி
சுத்திடுங்கள் சுந்தரர்க்கே

2 comments:

கோபிநாத் said...

ஆறுமுகனையும் கூட்டணியில் அருமையான பாடல் ;)

\\விளக்கெடுங்கள் திட்டி சுத்\\

ஒரு டவுட்டு விளக்கெடுங்கள் அப்படின்னா?

மீனாமுத்து said...

வருகைக்கு நன்றி கோபி!

சிலேட்டு விளக்கு(நகரத்தார் வீடுகளில் இருக்கும்)உள்ளே மெழுகுதிரி எற்றி அதை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறு கையால்(மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர்)ஆலத்தி திட்டிசுத்துவது!