Sunday, June 13, 2010

தூங்காத கண்ணுக்கு

33.

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

கண்ணுக்கோ கண்ணெழுதி
கடைக்கண்ணுக்கோ மையெழுதி

தூங்காத கண்ணுக்கு
துரும்புகொண்டு மையெழுதி

உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி

அன்னம் எழுதி என் கண்ணே
அதன் மேல் புறாவெழுதி

தாரா எழுதி என் கண்ணே
தாய் மாமன் பேரெழுதி

கொஞ்சு கிளியெழுதி என்கண்ணே
குட்டி அம்மான் பேரெழுதி

அஞ்சு கிளி எழுதி என்கண்ணே
அய்யாக்கள் பேரெழுதி

பச்சைக் கிளி எழுதி என் கண்ணே
பாட்டன்மார் பேரெழுதி

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ…

8 comments:

கோபிநாத் said...

அருமை..;)

அன்புடன் நான் said...

தாலாட்டு கேட்டு எவ்வளவு நாளாச்சி?
அருமை.

மீனாமுத்து said...

நன்றி கோபி!
எங்கே இவ்வளவு நாளா காணோம்!

மீனாமுத்து said...

வருகை கண்டு மகிழ்ச்சி!
நன்றி கருணாகரசு!

தங்கள் வலைப்பக்கம் வந்தேன்
அனைத்து கவிதைகளும் அருமை!
அனைவரும் புரிந்து கொள்ளும்படி
மிக தெளிவாக உள்ளது!வாழ்த்துகள்!

Unknown said...

hi meena muthu..
you are doing great job..
thank you.

மீனாமுத்து said...

வருகை கண்டு மகிழ்ச்சி!பாராட்டிற்கு நன்றி ஷிவா.

கருணாகார்த்திகேயன் said...

மீனா , ராகம் தெரிஞ்சா நல்லா இருக்கும் .. எனக்கு இசை அறிவு உருவாக்குற அளவுக்கு இல்ல .... அருமையான தாலாட்டு !

meenamuthu said...

நன்றி கார்த்திகேயன்!

குரல் வடிவத்திலும் தாலாட்டை தரவேண்டுமென ஆசைதான்..!
பாவம் நீங்கள்லாம். அதான்.. :))