Tuesday, April 20, 2010

சங்கு முழங்க...

31

சங்கு முழங்க என் கண்ணே
சமுத்திரத்தில் மீன் முழங்க

எங்கே முழங்குதுன்னு சாமி
ஏணி வச்சு பார்த்தாராம்

அடிக்கரும்பை வெட்டி
நடுக்கடலில் வில்லூணி

கருங்கடலில் வில்லூணி
கணபதியை கை தொழுது

செங்கடலில் வில்லூணி
சிவனாரை கை தொழுது

ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ

வள்ளியம்மை தெய்வானை
மாறாத சண்டையினால்

தெய்வானை ஓடி வந்து
சீவிலியை சாட்சி வச்சா

வள்ளியம்மை ஓடி வந்து
மயில்தனையோ சாட்சி வச்சா

ஏங்கானூம் வேலவரே
இந்த மதி உந்தனுக்கு

தேம்பி அழுதாளாம்
தேன்மொழியால் தெய்வானை

போங்கானும் வேலவரே
பொன்மலைக்கு அப்பாலே

பொங்கி அழுதாளாம்
பூங்கொடியாள் வள்ளியம்மை

கல்லுமலைக்குள்ளிருந்து
கதிர்வேலர் ஓடி வந்தார்

கடுகளவும் பயம் வேண்டாம்
காத்திடுவேன் உங்களையே!

கண்ணான கண்ணே என்
கண்மணியே கண்ணுறங்கு

ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ

5 comments:

தமிழன்பன் said...

கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் தொகுப்புக்கள் அனைத்தும் அருமை. தொடருங்கள்...

கோபிநாத் said...

நல்ல வார்த்தைகள் கொண்டு அருமையான பாடல் ;))

ஒரு சின்ன உதவி சில பாடகளின் கருத்து என்ன என்பதை புரிஞ்சிக்க முடியல. எதுக்காக ரெண்டு மனைவிகளும் அழுதாளாங்களாம்!??

எல்லா பாடல் போடும் போதும் ஒரு சின்ன கதை போல விளக்கம் கொடுத்த இன்னும் மனசுல பதியும் அதுக்கு தான்.

தொந்தரவு கொடுத்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

தமிழன்பன் said...

//எதுக்காக ரெண்டு மனைவிகளும் அழுதாளாங்களாம்!??//
ஒருவேளை முத்துக்கருப்பரின் மூன்றாவது மனைவி மூக்கை நுழைத்திருக்கலாம்:)

மீனாமுத்து said...

நன்றி மணிவண்ணன்,

மீனாமுத்து said...

நன்றி கோபி.
தொந்தரவெல்லாம் ஒன்றும் இல்லை:)

// எதுக்காக ரெண்டு மனைவிகளும் அழுதாளாங்களாம்!??//

இருவருமே வேலவரை தங்களுக்கு மட்டுமே உரியவர் என்ற நினைப்பினால்த்தான் :)))