30
ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ
எங்கிருந்தான் எங்கிருந்தான்
இது நெடுநாள் எங்கிருந்தான்
மாசி மறஞ்சிருந்தான்
மழமேகம் சூழ்ந்திருந்தான்
திங்கள் மறஞ்சிருந்தான்
தேவாக்கள் கூடருந்தான்
சிவனோடருகிருந்தான்
தேடியதால் இங்கு வந்தான்
மகாதேவர் கூடருந்தான்
மனவருத்தங்கண்டு வந்தான்
எங்கள் குடி மங்காகும்
எதித்த குடி ஏசாகும்
தங்கமணி பொற்கதவை
தாழ்திறக்க வந்தானோ
தாளால் கடுதாசி
தங்கத்தால் மைக்கூட்டு
பேனா புடிச்செழுத தம்பி
பொறந்து வந்த புனக்கிளியோ
ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ
21 comments:
நல்ல தாலாட்டு. இன்னும் பலவற்றைச் சேமியுங்கள். வாழ்த்துக்கள்.
கூடவே தாலாட்டு வடிவங்கள் பலவற்றையும் ஆய்வு செய்யுங்கள். இவை ஒரு சில சந்தங்களில் மட்டும் இருப்பது எதனால்?
அன்புடன்,
இராம.கி
அற்புதமான தாலாட்டு, பகிர்ந்ததுக்கு நன்றி.
மிகச்சிறந்த முயற்சி. என்னுடைய பேத்தி
பிறந்த போது தான் தேடலில் உங்களின்
வலைத்தளைத்தை கண்டு பிடித்தேன்.
இந்த தாலாட்டுக்களையெல்லாம் ஒலி வடிவில் கொண்டு வர முடியுமா?
ஆராரோ ஆரிராரோ இந்த வார்த்தை குழந்தைகளை மயக்குகிறது.
அன்புடன்
சந்துரு
இன்றுதான் உங்கள் வலைபூவை பார்த்தேன்.கவிதைகள் அனைத்தும் சுய ஆக்கமா அல்லது பிரதியா என அறிய ஆவல்
அருமையான பாடல்...;)))
// இந்த தாலாட்டுக்களையெல்லாம் ஒலி வடிவில் கொண்டு வர முடியுமா?//
நான் கூட நல்லா தாலாட்டுவேன் மீனா அம்மா! உங்க தாலாட்டு அருமை அம்மா!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
வாருங்கள் திரு இராம.கி,தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.
தங்கள் வீட்டிலும் தாலாட்டுகள் நிச்சயம் தெரிந்திருக்கும் அவைகளை யும் கேட்டு அறியத்தாருங்கள். நான் அறிந்ததுபோக மற்றும் எல்லோரிட மும் கேட்டு தாங்கள் சொல்வதுபோல் இங்கு சேமிக்க ஆசை.
//இவை ஒரு சில சந்தங்களில் மட்டும் இருப்பது எதனால்? //
ஆமாம் நினைத்தால் அதிசயமாக இருக்கிறது! யாராவது இது குறித்து தெரிந்திருப்பார்களா?கேட்கவேண்டும்.
தங்கள் வருகை எனக்கு மிக மகிழ்ச்சி முகுந்த் அம்மா:)
மீண்டும் வாருங்கள்.
தாமோதர் சந்துரு தங்களின் வருகைக்கு நன்றி.
படத்தில் இருக்கும் அந்த குட்டி தேவதை யார் தங்கள் பேத்தி?!
// இந்த தாலாட்டுக்களையெல்லாம் ஒலி வடிவில் கொண்டு வர முடியுமா?
ஆராரோ ஆரிராரோ இந்த வார்த்தை குழந்தைகளை மயக்குகிறது.//
முடியும் போல தெரியுதே!
சாந்தியோட பதிலை பார்த்தால்!
இதோ: // நான் கூட நல்லா தாலாட்டுவேன் மீனா அம்மா! //
நன்றி சாந்தி ஆரம்பிச்சுடுவோம் :)
வருகைக்கு நன்றி மணிவண்ணன்.
// கவிதைகள் அனைத்தும் சுய ஆக்கமா அல்லது பிரதியா என அறிய ஆவல் //
நல்லதொரு கேள்வி!
சுய ஆக்கம் இல்லை. என் தாயார் உறவினர்கள் (என்று என் சிறுவயதில் இருந்தே அவர்கள் பாட பாட அதை கேட்டு மனப்பாடமாகி(!)எனக்கு
குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு பாடும்போது எனக்கே அதிசயம் மட மடவென்று வார்த்தை பிசகாமல் நான் பாடியது!)இப்படி அவர்களிடம் இருந்து கத்துக்கொண்டதுதான். அவர்களும் என்னைப்போன்றேதான் கத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.இவைகளை யார் இயற்றி இருப்பார்கள்!? திரு இராமகி சந்தம் பற்றி சொன்னது போல இதையும் இனிமேல்த்தான் ஆராயவேண்டும் :)
(தங்கள் பெயரில் எனக்கொரு நல்ல நண்பர் உண்டு!)
வாருங்கள் கோபி,தங்களின் தொடர்ந்த வருகையும் பாராட்டுதல்களும்,எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது.மிகவும் மகிழ்ச்சி நன்றி.
போகி, தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
தங்களின் வலைத்தளம் நன்றாக சுவாரஸ்யமாக இருக்கிறது!வாழ்த்துகள்.
ippidi pattu kettu romba varusam achu. thaimarkal marantha intha mathiri pattukal kerkumbodu 60 varusathakku mun naan keta en ammavin kural gpakam varuthu. nandri
வாருங்கள் திரு பரமசிவம்,
வருகைக்கு என் நன்றி.
நீங்கள் சொல்வது போல் இங்கு ஒவ்வொரு தாலாட்டையும் நானும்
என் தாயின் நினைவுடனேயேதான் பதிகிறேன்!
மகள் பிரசுபத்திற்காக அமெரிக்காவிற்கு என் மனைவியுடன் வந்திருக்கும் எனக்கு, என் மனைவி பேத்தியை தாலாட்டும்போது சில வரிகள் இல்லாதது போல் தோன்றியது. நான் இணையத்தில் தேடும்போது உங்கள் தளத்திற்கு வந்தோம். என்ன மகிழ்ச்சி.
கிட்டத்தட்ட 20 வருடங்கள கழித்து update செய்தாயிற்று. நன்றி
ராமனதன் n சகுந்தலா காரைக்குடி.
வாருங்கள் திரு ராமனாதன்&திருமதி சகுந்தலா! மிகவும் நன்றி.
தங்களின் மகிழ்ச்சி எனக்கும் தொற்றிக் கொண்டது!
என் இந்த பதிவு தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது கண்டு எனக்கும் மிக சந்தோஷம்!
தங்களின் பேத்திக்கு என் வாழ்த்துகள்.
என் பிறந்த ஊர் (காரைக்குடிக்கு அருகில்) சிறுகூடல்ப்பட்டி!
அட?? நம்ப மீனாவா? அருமை மீனா. நன்றி, நன்றி, நன்றியோ நன்றி.
அட! நம்ம கீதாவா..!
கீதாவின் வருகைகண்டு மனம் மகிழ்கிறது!நன்றி கீதா.
எல்லாமே அருமை, பொக்கிஷங்கள். கூகிள் + இல் நண்பர் ஜீவ்ஸின் சுட்டியைக் கண்டு இங்கே வந்தேன். :))))
மிக்க நன்றி
Post a Comment