Thursday, October 1, 2009

அம்மானார் எல்லையிலே ..

29

அம்மானார் எல்லையிலே
என்னவச்சா தோப்பாகும்

வச்ச பயிர் வளரும்
வாழைவச்சாத் தோப்பாகும்

சேத்த பயிர் வளரும்
தென்னைவச்சாத் தோப்பாகும்

தொட்ட எடந்தொலங்கும்
தோ..ட்டம் பயிராகும்

தென்னையும் வாழையும்
சேத்துவச்சாத் தோப்பாகும்

வாழையும் தென்னையும்
வாங்கிவச்சாத் தோப்பாகும்

இஞ்சி பயிராகும்
எலுமிச்சை தோப்பாகும்

மஞ்சப் பயிராகும்
மாதுளையும் தோப்பாகும்

ஏலக்கா.. காய்க்கும்
இரு..நூறு பிஞ்சுவிடும்

சாதிக்கா காய்க்கும்
தாய்மாமன் எல்லையில

வாழை இலை போட்டு
வந்தாரை கையமத்தி

வருந்தி விருந்துவைக்கும்
மகராசா பேர..னோ

தென்னை இலை பரப்பி
சென்றாரை கையமத்தி

தே..டி விருந்து வைக்கும்
திசை கருணர் பேரனோ.

ராராரோ ராரிரரோ
என் கண்ணே
ராரிரரோ ராராரோ.

7 comments:

கோவி.கண்ணன் said...

அருமையான பாடல்

கோபிநாத் said...

மீண்டும் ஒரு அருமையான தாலாட்டு ;)

meenamuthu said...

நன்றி நன்றி!

கோவி கண்ணன்,கோபிநாத் :)

தேவன் said...

தாலாட்டு பாடல் அருமை

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அம்மா உங்க சொந்த ஊர் எது? நீங்க இப்போ எங்க இருக்கீங்க? பணி புரியும் பெண்ணா? ஒரு முறை கீதா சாம்பசிவம் அம்மா அவர்கள் கூட தமிழமுதம் குழுமத்தில் உங்க தாலாட்டு வலைப்பதிவு பத்தி சொல்லீருந்தாங்க.ஆனா உங்க வலை முகவரி இல்ல.இப்போ வலை மூலமா சந்திச்சதுல மட்டற்ற மக்ழ்ச்சி.அப்புறம் கும்மாயத்துக்கு மாவை கொஞ்சம் நெய்யில வெதுப்பி கீழ இறக்கி வச்சு தோசை மாவு பக்குவத்திற்கு கட்டியில்லாம கரைச்சுக்கிட்டு அப்புறம் அடுப்பில வச்சு கிண்டுங்க.கிண்டும் போது கொஞ்சம் கொஞ்சமா நெய் விட்டு மாவு வெந்து கையில ஒட்டாத பக்குவத்துல இறக்குங்க!

meenamuthu said...

உன் வருகை என் மகிழ்ச்சி சாந்தி,

ஓ..! கீதா என்னோட வலைப்பதிவு பற்றி சொல்லி இருக்காங்களா!:)

கும்மாயத்திற்கான குறிப்பிற்கு நன்றிம்மா.

meenamuthu said...

வருகைக்கு நன்றி கேசவன்