Thursday, July 9, 2009

மதுரை இரு காதம்

27

மதுர இரு காதம்
வாழ் மதுர முக்காதம்
அம்பத்தாறு தேசம்
ஆள வந்த சீமானோ

பாட்டனாராண்ட
பதினெட்டு ராச்சியமும்
நாட்டமுடன் ஆள வந்த
ராசாவோ எங்களய்யா(ராராரோ)

வெள்ளி வளை பூட்டி
விசாலமா தொட்டி கட்டி
தங்க வளை பூட்டி
சதுரலங்கா(ய்)த் தொட்டி கட்டி

பச்சை இலுப்ப வெட்டி
பால் வடிய தொட்டி கட்டி
தொட்டியில அட்டணக்கா(ல்)
தூங்குறது யாரு மகன்

இன்னார் மகனோ
இனியார் மருமகனோ
தனதாய் விளையாட
தவம் பெற்று வந்தவனோ

ராராரோ ராரிரரோ
என்னய்யா
ராரிரரோ ராராரோ

2 comments:

முகவை மைந்தன் said...

அருமையான பதிவு. விரும்பிப் படித்தேன். பாடியும் பாத்தாச்சு. வாழ்த்துகள்.

கோபிநாத் said...

நல்ல பகிர்வு

நன்றி ;)