Thursday, April 9, 2009

சதுரகிரி மலையேறி...

22.

ராராரோ ராரிரேரோ...
ராரிரேரோ....

சதுரகிரி மலையேறி
சாதிலிங்க கட்டை வெட்டி

ஈழத்து கப்பலிலே
ஏற்றிவரும் தேக்குமரம்

ஏழு தச்சன் ஆசாரி
இழைபிழைக்கும் கம்மாளர்

சேர்த்து பணி படுத்தி
சித்திரத்தால் ஒப்பமிட்டு

முன்பக்க தொட்டிலுக்கு
முத்துச்சரம் வைத்திழைத்து

பின்பக்க தொட்டிலுக்கு
பச்சைக்கல் வைத்திழைத்து

வலதுபுற தொட்டிலுக்கு
வைரக்கல் வைத்திழைத்து

இடதுபுற தொட்டிலுக்கு
இரத்தினக்கல் வைத்திழைத்து

பஞ்சாட்சரமெழுதி ஒங்க
பாட்டனார் பேரெழுதி

சிரிக்கும் கிளியெழுதி ஒங்க
சின்னய்யா பேரெழுதி

அஞ்சு கிளி கொஞ்ச
ஆண்டம்மான் பேரெழுதி

கொஞ்சு கிளி அஞ்செழுதி
குட்டியம்மான் பேரெழுதி

தாரா எழுதி
தாய் மாமன் பேரெழுதி

அன்னம் எழுதி
அதன் மேல் புறாவெழுதி

கொண்டு வந்து கண்டானே ஆசாரி
கொம்பனையா வாசலிலே..

ராராரோ...

4 comments:

கோபிநாத் said...

அருமை....அழகான வார்த்தைகள் ;))

வாழ்த்துக்கள் & நன்றி ;)

கிருஷ்ண மூர்த்தி S said...

/கொஞ்சு கிளி அஞ்செழுதி
குட்டியம்மான் பேரெழுதி/

சென்ற காலங்களில் செட்டி நாட்டு வளப்பத்தைப் பறைசாற்றும் வார்த்தைகள்!
தாய் மொழியில் தாலாட்டு!
ஆச்சிக்கு என் வந்தனங்கள்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com

மீனாமுத்து said...

மிகவும் நன்றி கோபி!

மீனாமுத்து said...

உங்களுக்கும் என் வணக்கங்கள் திரு கிருஷ்ணமூர்த்தி!தங்கள் வருகைக்கு நன்றி.

அடுத்த தாலாட்டைப்பாருங்கள் பல வரிகள் நெகிழவைக்கும்!

எனக்கு மிகவும் பிடித்த தாலாட்டு