16
சீரங்கம் ஆடி திருப்பார் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரை கடலாடி
சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
முக்குளமும் ஆடி
முத்திபெற்று வந்த கண்ணோ
திங்கள்தனைப் பணிந்து திருக்கேசுரம் ஆடி
தைப்பூசம் ஆடி
தவம் பெற்று வந்த கண்ணோ!
வாடிய நாளெல்லாம் வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்த கண்ணோ!
1 comment:
இனிய எளிய தமிழ். மிக அருமை.
சில வரிகளின் பொருள் பொதிவை அறிய தொடர்பான விளக்கங்கள் தேவை. உதாரணமாக, "மதுரை கடலாடி சங்கு முகமாடி"... மதுரையில் ஏது கடல்? சங்கு முகமாடி என்பது என்ன ?
Post a Comment