Wednesday, August 13, 2008

கடைக்கு கடை ...

9

கடைக்கு கடை பாத்து
கல்லெழச்ச சங்கெடுத்து
சுத்தி சிகப்பு வச்சு
தூருக்கோர் பச்ச வச்சு
வாய்க்கு வைரம் வச்சு
வாங்கி வந்தார் அம்மானும்.

(ஒருவருக்கும் மேல் என்றால்
அம்மான்மார் என்று பாடவேண்டும்.)
(அம்மான் என்பது தாய்மாமனை குறிக்கும் சொல்.)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^
8

காசியில பட்டெடுத்து
கப்பலுல தொட்டி கட்டி
தொட்டி வருஞ்சு கட்டி
துரை மகனை போட்டாட்டி
தொட்டிக்கும் கீழே
துணையிருப்பார் சொக்கலிங்கம்
கட்டிலுக்கும் கீழே
காத்திருப்பாள் மீனாட்சி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
7

கரும்பு கல கலங்க
கல்லாறு தண்ணி வர
கல்லாத்து தண்ணியில
நின்னாடும் பம்பரமோ
பம்பரமோ எம்பொருளோ
பரமசிவர் தந்த கண்ணோ
எம்பொருளோ பம்பரமோ
ஈஸ்வரியாள் தந்த கண்ணோ

No comments: