Thursday, August 14, 2008

இரும்பால ஊரணி...

13

இரும்பால ஊரணியாம்
இருபுரமும் தாமரையாம்
தாமரையில் நூலெடுத்து
தனிப்பசுவில் நெய்யுருக்கி
வாழலையும் மா விளக்கும்
வச்செடுத்த குஞ்சலரோ
தேங்காயும் மாவிளக்கும்
சேர்த்தெடுத்த குஞ்சலரோ
குஞ்சலரோ அஞ்சலரோ
ஆடும் சிதம்பரமோ
தில்லைச்சிதம்பரமோ
திருச்செந்தூர் வேலவரோ
ராராரோ ராரிரரோ..
ராரிரரோ ராராரோ..


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
12

கண்ணான கண்ணனுக்கு
கண்ணுறக்கம் இல்லைன்னு
தூங்காத கண்ணுக்கு
துரும்பு கொண்டு மையெழுதி
உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
கண்ணுக்கே மையெழுதி
கண்கவர பொட்டுமிட்டு
வண்டுகள் கவி பாட
மரங்கள் நடமாட
செண்டுகள் ஆட
தேசத்தார் கொண்டாட
ஆடுமாம் தூளி
அசையுமாம்
பொன்னூஞ்ச(ல்)
ஆராரோ ஆரிரரோ..
ஆரிரரோ ஆராரோ..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^
11

ஆராரோ ஆரிரரோ..
ஆரிரரோ ஆராரோ..
யாரடிச்சு நீயழுதே
அடிச்சாரை சொல்லியழு
யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
அவனா அழுகிறான்
ஆத்தாள் மடி தேடி
தானா அழுகிறான்
தம்பி துணை வேணுமின்னு